விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சுப்பிரமணியர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தருமர் மகன் காளிமுத்து (27). இவர் 2018-ம் ஆண்டில் காவல் துறையில் இணைந்தார். மதுரையில் பயிற்சி முடித்த பிறகு 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தஞ்சாவூர் ஆயுதப் படையில் பணியில் சேர்ந்தார். தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே உள்ள காவலர் குடியிருப்பில் தங்கியிருந்த இவர், காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் கணினி இயக்குபவராகப் பணியாற்றி வந்தார்.
சுடு தண்ணீர் வைக்கும் போது ஆயுதப்படை காவலர் ஒருவர் மின்சாரம் தாக்கி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் தஞ்சையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சுப்பிரமணியர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தருமர் மகன் காளிமுத்து (27). இவர் 2018-ம் ஆண்டில் காவல் துறையில் இணைந்தார். மதுரையில் பயிற்சி முடித்த பிறகு 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தஞ்சாவூர் ஆயுதப் படையில் பணியில் சேர்ந்தார். தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே உள்ள காவலர் குடியிருப்பில் தங்கியிருந்த இவர், காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் கணினி இயக்குபவராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இன்று காலை குளிப்பதற்காக வாளியில் தண்ணீரை நிரப்பி எலக்ட்ரிக் ஹீட்டர் கருவி மூலம் வெந்நீர் தயார் செய்துகொண்டிருந்தார். அப்போது, எலக்ட்ரிக் ஹீட்டர் கருவியைத் கீழே தொட்ட போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதனையடுத்து, காளிமுத்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதையும் படிங்க;- திடீர் துப்பாக்கி சத்தம்... அதிர்ந்துபோன ஊழியர்கள்... வங்கி கழிவறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பாதுகாவலர்..!
பின்னர், நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த காவலர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது குளியல் அறையில் மின்சாரம் தாக்கி இறந்த நிலையில் காணப்பட்டார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காளிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.