நாளை பெரிய கோவில் குடமுழுக்கு..! விழா கோலம் பூண்டது தஞ்சை..!

By Manikandan S R S  |  First Published Feb 4, 2020, 4:30 PM IST

பாதுகாப்பு பணிக்கு திருச்சி மண்டலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து போலீசார் வந்துள்ளதாக தெரிவித்த அவர், 5500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக பேசினார்.மேலும் பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி கும்பாபிஷேகத்தை காணும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக திரிபாதி தெரிவித்திருக்கிறார்.

தமிழர் வரலாற்றின் அடையாளமாக விளங்கும் தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு தமிழில் குடமுழுக்கு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த தமிழகமும் தஞ்சை கோவிலின் குடமுழுக்கை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறது. குடமுழுக்கில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்படுத்தப்பட்டுள்ளன.

Tap to resize

Latest Videos

undefined

கும்பாபிஷேகம் தொடர்பான பாதுகாப்பு பணி ஆலோசனை கூட்டம் தமிழக டி.ஜி.பி. திரிபாதி தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. பின் நிருபர்களிடம் அவர் கூறும்போது: நாளை நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதன்காரணமாக பக்தர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

click me!