கும்பகோணத்தில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை தஞ்சை மாவட்டத்தில் 11 பள்ளிகளில் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள்- ஆசிரியர்கள் என மொத்தம் 143 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 பேர் நேற்று முன்தினம் குணமடைந்து வீடு திரும்பினர்.
undefined
கொரோனாவால் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை முதல் 9,10,11-ம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கும்பகோணம் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 956 மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 169ஆக உயர்ந்துள்ளது.