ராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு... மாவட்ட ஆட்சியர் அதிரடி..!

By vinoth kumar  |  First Published Sep 9, 2019, 12:12 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகப் போராடிய இம்மானுவேல் சேகரன், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 1956-ம் ஆண்டு முதுகுளத்தூரில் நடந்த சாதிக் கலவரத்தைத் தொடர்ந்து நடந்த சமாதான கூட்டத்தில் பங்கேற்ற இவர் 1957-ம் ஆண்டுச் செப்டம்பர் 11-ம் தேதி கொல்லப்பட்டார். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பரமக்குடியில் ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், வரும் 11-ம் தேதி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அங்கு வருகை தரும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இமானுவேல் சேகரன் நினைவு தினம், முத்துராமலிங்கம் குருபூஜை உள்ளிட்டவைகள் வரவுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

click me!