பாதுகாப்புக்கு வச்சிருக்கேன்.. - ஆட்சியரை பார்க்க துப்பாக்கியுடன் வந்து பரபரப்பை ஏற்படுத்திய கருணாஸ்!!

By Asianet Tamil  |  First Published Aug 28, 2019, 2:41 PM IST

ராமநாதபுரம் ஆட்சியரை சந்திக்க வந்த சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் இடுப்பில் துப்பாக்கியை வைத்திருந்ததை கண்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
 


திருவாடானை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் நடிகர் கருணாஸ். தனது தொகுதியில் நடைபெறும் ஒரு பள்ளி விழாவிற்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை அழைக்க திட்டமிட்டிருந்தார்.

Tap to resize

Latest Videos

undefined

இதற்காக ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் இடுப்பில் துப்பாக்கி வைத்திருந்தார். அதை பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆட்சியரை பார்க்க வந்த இடத்தில் துப்பாக்கி எதற்காக வைத்திருக்கிறார் என்று சுற்றி இருப்பவர்கள் திகைத்தனர். எனினும் கருணாஸ் ஆட்சியரை பார்த்து விட்டு சென்று விட்டார்.

துப்பாக்கி வைத்திருப்பது குறித்து அவரோடு இருப்பவர்களிடம் கேட்டதற்கு, துப்பாக்கிக்கான லைசன்ஸ் கருணாஸிடம் இருப்பதாகவும் , தனது பாதுகாப்பிற்காக அதை எப்போதும் வைத்திருப்பார் என்று கூறினர். 

மேலும் எப்போதும் காரில் தான் கருணாஸ் துப்பாக்கியை வைத்திருப்பார் என்றும் தற்போது வேதாரண்யம் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை அடுத்து தனது பாதுகாப்பிற்காக இடுப்பில் வைத்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

click me!