எப்பவும் பெய்யாத மழை, பெய்திருக்கு..!! இதை மட்டும் செய்யுங்க, ராமநாதபுரத்தில் கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு..!!

By Ezhilarasan Babu  |  First Published Nov 20, 2019, 12:54 PM IST

மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் தற்போது பரவலாக மழை பெய்துள்ளது  கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் மொத்தம் 384.41 மி.மீ. மழையளவுபதிவாகியுள்ளது.  இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மூலம் தற்போது வேளாண்மைப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


விவசாய பணிகளுக்கு பயன்படுத்தும் உரங்களை அதிக விலைக்கு விற்றாலும் வணிக ரீதியாக விற்பனைக்கு பதுக்கி வைத்தாலும்  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Latest Videos

undefined

ராமநாதபுரம் புதிய பேருந்து  நிலையம் பகுதியில்  கூட்டுறவுத்துறையின்  சார்பில்    66-வது அனைத்திந்திய கூட்டுறவு  விழா நடைபெற்றது  இதில்   மொத்தம் 463 பயனாளிகளுக்கு ரூ.15.85 கோடிமதிப்பில் கடனுதவிகள்  வழங்கப்பட்டது மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் தற்போது பரவலாக மழை பெய்துள்ளது   கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் மொத்தம் 384.41 மி.மீ. மழையளவுபதிவாகியுள்ளது.  இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மூலம் தற்போது வேளாண்மைப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இது தொடர்பாக  செய்தியாளர்களிடம்  மாவட்ட  ஆட்சித்தலைவர்  வீரராகவராவ்  கூறுகையில்  ,

 

விவசாயிகளுக்கு அத்தியாவசியத்தேவையான உரம் போதிய அளவு விநியோகித்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம்  நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  உரங்களை அதிக விலைக்கு விற்றாலும் வணிக ரீதியாக விற்பனைக்கு பதுக்கி வைத்தாலும்  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் உரத்தட்டுப்பாடுகளை கண்காணிக்க தனி ஆய்வு  குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும்  ஆட்சித்தலைவர்  வீரராகவராவ் தெரிவித்தார்

click me!