“எனக்கு தற்போது 16 வயதுதான் ஆகிறது. எனக்கு பொறுத்தமானவர் பி.வி.சிந்துதான். அவரையே திருமணம் செய்து கொள்வேன். அவரை எங்கிருந்தாலும் விட மாட்டேன்” என்று பேசி பரபரப்பு கிளப்பினார்.
பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பரபரப்பு ஏற்படுத்திய ராமநாதபுரத்தை 75 வயது தாத்தா மீண்டும் மனு அளித்து பரபரப்பு கிளப்பியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் விரதக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 75 வயதான மலைச்சாமி. இவர் கடந்த ஓராண்டாகவே தனக்கு 16 வயது எனக் கோரி பிறப்புச் சான்றிதழ் கேட்டு வாரம்தோறும் மாவட்ட ஆட்சியர் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்து வந்தார். அவருக்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மனு கொடுப்பதை நிறுத்தவில்லை. இந்நிலையில் 15 நாட்களுக்கு முன்பு இந்தியாவின் நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்துவை திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவிடம் அளித்து பரபப்பு கிளப்பினார். ஆட்சித் தலைவர் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் பெற்றுக் கொண்டு, முதியவர் மலைச்சாமியை அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “எனக்கு தற்போது 16 வயதுதான் ஆகிறது. எனக்கு பொறுத்தமானவர் பி.வி.சிந்துதான். அவரையே திருமணம் செய்து கொள்வேன். அவரை எங்கிருந்தாலும் விட மாட்டேன்” என்று பேசி பரபரப்பு கிளப்பினார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு முதியவர் மலைச்சாமி அந்தார்.
அங்கிருந்த அதிகாரிகளிடம், பி.வி. சிந்துவை திருமணம் செய்து வைக்கக் கோரி கொஞ்சி கூத்தாடி அடம் பிடித்தார். தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கும் அவருடைய கோரிக்கைக்கு பதில் சொல்லாத அதிகாரிகள், அவரை கஷ்டப்பட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தார்கள். ஒவ்வொரு வாரமும் இது தொடர் கதை ஆகிவரும் நிலையில், அவரை மனநல பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் வைத்துள்ளனர்.