பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.. தடுப்பு மீது ஏறி கடலுக்குள் விழும் நிலையில் அந்தரத்தில் தொங்கியதால் பரபரப்பு

By vinoth kumar  |  First Published Oct 12, 2022, 12:25 PM IST

பாம்பன் பாலத்தில் அரசு பேருந்தும் தனியார் ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்து பாலத்தின் தடுப்பு மீது மோதி நின்றதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 


பாம்பன் பாலத்தில் அரசு பேருந்தும் தனியார் ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்து பாலத்தின் தடுப்பு மீது மோதி நின்றதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 

இன்று காலை சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு ஆம்னி பேருந்து ஒன்று பாம்பன் பாலத்தில் வந்து  கொண்டிருந்த போது முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது எதிரே வந்த அரசு பேருந்து மீது ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து பாம்பன் பாலத்தின் அருகே உள்ள நடை மேடை மீது ஏறி பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி கடலில் விழும் சூழ்நிலை ஏற்பட்டது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- உத்தராகண்ட்டில் திருமணத்திற்கு சென்று திரும்பியபோது... பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 25 பேர் பரிதாப பலி

உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஆம்னி பேருந்து ஓட்டுநர் பேருந்தை லாபமாக நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஓம்னி பேருந்து பாலத்தின்  தடுப்பு சுவர் மீது மோதியதில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் படுகாயமடைந்து பேருந்துக்குள் மாட்டி கொண்டார். உடனடியாக பாம்பன் பாலத்தில்  நின்று கொண்டிருந்த மீனவர்கள் கயிறு கட்டி விபத்தில் சிக்கி பேருந்துக்குள் மாட்டி கொண்ட ஆம்னி  பேருந்தின் ஓட்டுநரை நீண்ட நேரம் போராடி மீட்டனர்.

இந்த விபத்தின்போது அரசு பேருந்தில் வந்த 7 பயணிகள் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 7 பேர் மற்றும் படுகாயமடைந்த ஆம்னி பேருந்து ஓட்டுநர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தால் பாம்பன் பாலத்தில் போக்குவரத்து பாதிக்கபட்டது.விபத்து தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் மற்றும் பொதுமக்கள்  போக்குவரத்தை சீர் செய்தனர். இச்சம்பவம் குறித்து பாம்பன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க;-  கணவர் கண்முன்னே மனைவி, குழந்தை தலை நசுங்கி துடிதுடித்து பலி.. ரத்த வெள்ளத்தில் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறல்

click me!