1000 கிலோ பன்றி கறி அன்னதானம்! தடபுடலாக நடந்த சுடலை மாடன் கோயில் கொடை விழா!

By SG Balan  |  First Published Oct 17, 2023, 2:10 PM IST

1000 கிலோ பன்றி இறைச்சியுடன் அசைவ அன்னதானம்  பக்தர்களுக்கு பரிமாறப்பட்டது. இந்த அன்னதானத்திற்கு உள்ளூர் மட்டுமின்றி அக்கம்பக்கத்தில் உள்ள கிராமங்களில் இருந்தும் வருகை தந்திருந்தனர்.


ராமநாதபுரத்தில் நடைபெற்ற சுடலை மாடன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு அந்த பக்தர்களுக்கு பன்றி கறியுடன் சிறப்பான அசைவ உணவு அன்னதானமாகப் பரிமாறப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி அருகில் வெட்டுக்காடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சுடலை மாடன் சுவாமி கோயிலில் திங்கட்கிழமை கொடை விழா கோலாகலமாக நடைபெற்றது. உள்ளூர் மட்டுமின்றி அக்கம்பக்கத்தில் உள்ள கிராமங்களில் இருந்தும் வருகை தந்திருந்தனர்.

Latest Videos

தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கிடையாது:உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

10 நாட்களுக்கு முன் காப்பு கட்டுதலுடன் ஆரம்பமான கொடை விழாவில் பக்தர்கள் பன்றிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். திங்கட்கிழமை காலை பக்தர்கள் தீர்த்த குடங்களை கடற்கரைக்கு எடுத்துச் சென்றனர். முத்து பேச்சியம்மன், சுடலை மாடசாமி, கட்டேறும் பெருமாள் சாமி கோயிலுக்கு தீர்த்த குடத்தைக் கொண்டு சென்று, 16 வகை அபிஷேக ஆராதனைகள் நிகழ்ந்தன.

வழிபாட்டின்போது பலியிடப்பட்ட பன்றிகளைக் கொண்டு 1000 கிலோ பன்றி இறைச்சியுடன் அசைவ அன்னதானம்  பக்தர்களுக்கு பரிமாறப்பட்டது. வெட்டுக்காடு மக்கள் மட்டுமின்றி கன்னிராஜபுரம், நரிப்பையூர், சாயல்குடி, தூத்துக்குடி பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்று பன்றிக்கறி உணவை ருசித்துச் சாப்பிட்டனர்.

நிதாரி தொடர் கொலை வழக்கு: 16 பெண்களை பலாத்காரம் செய்து கொன்ற இருவரும் விடுதலை!

click me!