காதலுக்கு வயதில்லை.. கல்லூரி மாணவியுடன் 45 வயதுடையவர் ஓட்டம்.. அவமானத்தால் மகன்களை எரித்து கொன்று தாய் தற்கொலை

By vinoth kumar  |  First Published Sep 11, 2020, 11:33 AM IST

அறந்தாங்கி அருகே கணவர் கல்லூரி மாணவியுடன் சென்றதால் மனமுடைந்த மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


அறந்தாங்கி அருகே கணவர் கல்லூரி மாணவியுடன் சென்றதால் மனமுடைந்த மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த வல்லம்பக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்து (45). விவசாயி. இவரது மனைவி ராதா (34). இவர்களுக்கு அபிஷேக் (13)  ,அபிரித் (9) 4ம் வகுப்பு படிக்கும் மகன்கள் இருந்தனர். அறந்தாங்கி ரெத்தினகோட்டையை சேர்ந்த 22 வயதான கல்லூரி மாணவியுடன் முத்து நெருங்கி பழகி வந்துள்ளார். இதை மனைவி கண்டித்துள்ளார். இதனால், கணவர், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், மாணவியின் பெற்றோரும் முத்துவை கண்டித்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை முத்து, மாணவியை அழைத்துக் கொண்டு  ஊரை விட்டு ஓடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இதற்கிடையே, தனது கணவர், மாணவியுடன் ஓடியதால் அவமானம் தாங்கமுடியாமல் ராதா மனமுடைந்தார். இதே வேதனையில், நேற்றுமுன்தினம் இரவு தனது வீட்டில் 2மகன்களுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்துள்ளார். ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பெட்ரோலை 2 பேர் மீதும் ஊற்றி தீ வைத்துள்ளார். 

பின்னர் தன் மீதும் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீவைத்துக் கொண்டார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து காப்பாற்ற முயன்றனர். ஆனால், ராதாவும், அபிரித்தும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த அபிஷேக்கும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!