தடம் புரண்ட பயணிகள் ரயில்..! சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்..! பெரும் விபத்து தவிர்ப்பு..!

By Manikandan S R S  |  First Published Nov 10, 2019, 3:42 PM IST

கிருஷ்ணகிரி அருகே பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டதாக தகவல் வந்துள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ராயப்பேட்டை அருகே இருக்கிறது காடுசெட்டிபட்டி கிராமம். இங்கு இன்று காலையில் பெங்களூரு-காரைக்கால் பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்தது. ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. காடுசெட்டிபட்டி கிராமம் அருகே வந்த போது திடீரென ரயில் தடம் புரண்டதாக தெரிகிறது.

Tap to resize

Latest Videos

undefined

என்ஜின் தடம் புரள்வதை அறிந்த ஓட்டுநர் உடனடியாக சாமர்த்தியமாக செயல்பட்டு ரயிலை மெதுவாக நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில் தடம் புரண்டதும் அதிர்ச்சியடைந்த பயணிகள், ஓட்டுனரின் சாமர்த்திய நடவடிக்கையால் நிம்மதி அடைத்தனர். இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று தகவல் வந்துள்ளது. இது சம்பந்தமாக ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: அசுர வேகத்தில் வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட காவல்துறை அதிகாரி..! ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பலி..!

click me!