பர்கூர் அருகே இருக்கும் செட்டிபள்ளி பிரிவு சாலை அருகே வந்து போது அதே சாலையில் முன்னால் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சென்றுள்ளது. அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே இருக்கிறது கப்பல்வாடி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் விக்னேஷ்(28). இவர் வசிக்கும் அதே பகுதியில் குப்பன்(60), சென்னையன்(70) ஆகியோரும் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கப்பல்வாடி கிராமத்தில் இருந்து பெங்களூரு செல்ல மூவரும் முடிவெடுத்தனர். இதற்காக ஒரு இருசக்கர வாகனத்தில் மூன்று பேரும் அதிகாலையில் கிளம்பியுள்ளனர்.
பர்கூர் அருகே இருக்கும் செட்டிபள்ளி பிரிவு சாலை அருகே வந்து போது அதே சாலையில் முன்னால் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சென்றுள்ளது. அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து நிகழ்ந்தவுடன் அந்த வாகனம் நிற்காமல் சென்றுள்ளது.
இதைக்கண்ட அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவலர்கள் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த மூவரும் பெங்களூருவில் ஜவுளிக்கடை நடத்தி வந்தது தெரிய வந்ததுள்ளது.