கண்டா வரச்சொல்லுங்க; எங்கள் தொகுதி எம்.பி.,யை காணவில்லை' என, கரூர் தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுதும் பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக, பா.ஜ.க தலைமையிலான கூட்டணியும், 'இண்டியா' கூட்டணியும், கட்சிகளை இழுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக தலைமையில் மும்முனை போட்டி நிலவுகிறது.
undefined
இந்த நிலையில் கரூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரான ஜோதிமணி தொகுதி பக்கம் சரியாக வரவில்லை என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். மேலும், தேர்தல் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக தொகுதி பக்கம் வலம் வந்த வண்ணம் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால், தொகுதிக்கு தன்னால் முடிந்த பணிகளை சிறப்பாக செய்துள்ளதாக ஜோதிமணி தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் "எங்கள் தொகுதி எம்.பி.,யை காணவில்லை "கண்டா வரச் சொல்லுங்க" என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், அந்த சுவரொட்டியில் கரூர் பாராளுமன்ற தொகுதி மக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் காணவில்லை என அதிமுக போஸ்டர் மூலம் நூதன பிரசாரத்தை துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திடீர் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.