கொஞ்ச நேரம் என்னோட அட்ஜஸ்ட் பண்ணு.. உன்னோட வேலைய பர்மனென்ட் ஆக்குறேன்.. பெண் ஊழியரிடம் அத்துமீறிய டாக்டர்

By vinoth kumar  |  First Published Apr 6, 2022, 2:42 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக ஆனந்தன் என்பவர் பணி புரிந்து வருகிறார். இந்த மருத்துவமனையில் வீரப்பன்சத்திரம் சேர்ந்த திருமணமான 30 வயது மதிக்கத்தக்க பெண் ஊழியர் ஒருவர் தற்காலிகமாக பணியாற்றி வந்தார். 


கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட மருத்துவர் ஆனந்தன் அந்த பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

பெண் ஊழியர்

Tap to resize

Latest Videos

undefined

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக ஆனந்தன் என்பவர் பணி புரிந்து வருகிறார். இந்த மருத்துவமனையில் வீரப்பன்சத்திரம் சேர்ந்த திருமணமான 30 வயது மதிக்கத்தக்க பெண் ஊழியர் ஒருவர் தற்காலிகமாக பணியாற்றி வந்தார். 

பாலியல் அத்துமீறல்

இந்நிலையில் கடந்த மாதம் 22-ம் தேதி அந்த பெண் ஊழியர் பணியில் இருந்தபோது அங்கு வந்த மருத்துவர் ஆனந்தன் உங்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறி அந்த பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ஊழியர் இதுகுறித்து தனது கணவரிடம் கதறியபடி கூறியுள்ளார்.

காவல்நிலையத்தில் புகார்

பின்னர் அந்த பெண் ஊழியர் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் மருத்தவர் ஆனந்தன் மீது பெண்களை மானபங்கபடுத்துதல், பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமை மருத்துவர் பொறுப்பில் இருந்து ஆனந்தன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

click me!