தாயை இழந்த கர்ப்பிணி பெண்.. வளைகாப்பு நடத்தி நெகிழ வைத்த சக ஊழியர்கள்.!

Published : Mar 17, 2022, 01:31 PM IST
தாயை இழந்த கர்ப்பிணி பெண்..  வளைகாப்பு நடத்தி நெகிழ வைத்த சக ஊழியர்கள்.!

சுருக்கம்

கோவை மாவட்டம் அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் குணவதி. இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் சித்தோடு. இவர் கடந்த ஓராண்டிற்கும் மேலாக அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில்,  நிறைமாத கர்ப்பிணியான குணவதியின் தாயார் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். தாய் உயிரிழந்த நிலையில்  வளைகாப்பு நிகழ்வு  நடக்குமா என தெரியாமல் சோகத்துடன் இருந்து வந்தார்.   

அன்னூரில் தாயை  இழந்த  வட்டார வளர்ச்சி அலுவலக பெண்  இளநிலை உதவியாளர் ஒருவருக்கு அலுவலக ஊழியர்கள் சேர்ந்து வளைகாப்பு நடத்திய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 

கோவை மாவட்டம் அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் குணவதி. இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் சித்தோடு. இவர் கடந்த ஓராண்டிற்கும் மேலாக அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில்,  நிறைமாத கர்ப்பிணியான குணவதியின் தாயார் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். தாய் உயிரிழந்த நிலையில்  வளைகாப்பு நிகழ்வு  நடக்குமா என தெரியாமல் சோகத்துடன் இருந்து வந்தார். 

இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணி ஆசையை நிறைவேற்றும் வகையில் அவருடன் பணியாற்று சக ஊழியர்கள் இணைந்து அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியினை நடத்தினர். கர்பிணி ஊழியர்  குணவதிக்கு சக ஊழியர்கள் வளையல் அணிவித்து,  பொட்டு, பூ வைத்து ஆரத்தி எடுத்து தாய் ஸ்தானத்தில் இருந்து வளைகாப்பு நிகழ்வை  நடத்தினர்.

PREV
click me!

Recommended Stories

ஈரோடு மூதாட்டி கொ*லை வழக்கில் திடீர் திருப்பம்! வெளியான அதிர்ச்சி காரணம்! சிக்கிய நபர்?
ஒரு மாதத்திற்கு பின் தோண்டி எடுக்கப்பட்ட சடலத்தின் பின்னணி! விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!