ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு? ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ஆசிப் முசாஃபுதீன்

Published : Mar 14, 2023, 06:31 PM IST
ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு? ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ஆசிப் முசாஃபுதீன்

சுருக்கம்

தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆசிப் முசாஃபுதீனை காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பவர்கள் ஈரோட்டில் பதுங்கியிருப்பதாக என்ஐஏவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் தேதி இரவு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் ஈரோடு வந்தனர். மாணிக்கம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் இருந்த 2 இளைஞர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.  

மேலும் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட் போன், லேப்டாப், டைரிகள், சிம்கார்டுகள், வங்கி பாஸ் புக் ஆகியவைவும், சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.   

விசாரணையைத் தொடர்ந்து, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த சேலத்தைச் சேர்ந்த அப்துல் அலி ஜூபா என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். அப்துல் அலி ஜூபா அளித்த தகவலின் அடிப்படையில், ஈரோடு மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த ஆசிப் முசாஃபுதீன் (28), முஹம்மது யாசின் (27) ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்களில் முக்கியமானவர் ஆசிப் முசாஃபுதீன் என்பது தெரிய வந்தது. செல்போன் உதிரி பாகங்களை விற்கும் வர்த்தகத்தில் ஆசிப் முசாஃபுதீன் ஈடுபட்டு வந்துள்ளார். விசாரணையில் இவருடன் பிடிபட்ட முஹம்மது யாசினுக்கு பயங்கரவாத இயக்கத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் விடுவிக்கப்பட்டார்.

சாலையோரத்தில் கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் தமிழக இளைஞர்கள்; அதிர்ச்சி சம்பவம்

என்.ஐ.ஏ.அதிகாரிகளின் விசாரணைக்கு பின்னர் ஆசிப் முசாஃபுதீன் மட்டும் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் என்.ஐ.ஏ. நடத்தி வந்த இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் செய்து காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். சிறையில் இருந்த ஆசிப் முசாஃபுதீனை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸார் ஆசீப் முசாஃபுதீன் இன்று ஈரோடு அழைத்து வந்தனர். 

கோவையில் நடந்த மத்திய அரசு தேர்வில் ஆள் மாறாட்டம்; கையும் களவுமாக சிக்கிய வடமாநில இளைஞர்கள்

ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன் முன்னிலையில் போலீஸார் ஆஜர்படுத்திய நிலையில், தற்போது மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஈரோடு மூதாட்டி கொ*லை வழக்கில் திடீர் திருப்பம்! வெளியான அதிர்ச்சி காரணம்! சிக்கிய நபர்?
ஒரு மாதத்திற்கு பின் தோண்டி எடுக்கப்பட்ட சடலத்தின் பின்னணி! விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!