இனி ஓட்டலில் தக்காளி சட்னி கிடைக்குமா..? விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி... இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!

By Muthurama LingamFirst Published May 22, 2019, 12:41 PM IST
Highlights

அடிக்கும் வெயிலுக்கு தண்ணீர் இல்லாமல் மனிதன் மட்டுமல்ல தாவரங்களும் அல்லாடுகின்றனர். இந்த வறட்சியால் காய்கறிகளின் விலை தாறுமாறாக ஏறிவிட்டது. குறிப்பாக சமையலில் அதிகமாக உபயோகப்படும் தக்காளிவின் விலை அதிகமாக ஏறிவுள்ளது. 

அடிக்கும் வெயிலுக்கு தண்ணீர் இல்லாமல் மனிதன் மட்டுமல்ல தாவரங்களும் அல்லாடுகின்றனர். இந்த வறட்சியால் காய்கறிகளின் விலை தாறுமாறாக ஏறிவிட்டது. குறிப்பாக சமையலில் அதிகமாக உபயோகப்படும் தக்காளிவின் விலை அதிகமாக ஏறிவுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகாவில் சத்திரப்பட்டி, தாசரிபட்டி, புதுக்கோட்டை, விருப்பாச்சி உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி சாகுபடி அதிக அளவில் நடந்து வருகிறது. குறிப்பாக ஆழ்துளை கிணறுகள் மூலம் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பகுதியில் விளைவிக்கப்படும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் சில விவசாயிகளிடம் நேரடியாக வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். 

 இதுப்பற்றி விவசாயி ஒருவரிடம் கேட்டோம்.“கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.250 முதல் ரூ.300 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது விளைச்சல் குறைவு காரணமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை அதிகரித்துள்ளது. அந்தவகையில் தற்போது ஒரு பெட்டி தக்காளி ரூ.500-க்கு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. 

இதேபோலதான்  பழனி தக்காளி மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்து இருக்கிறது. அந்தவகையில் 14 கிலோ எடை கொண்டு ஒரு பெட்டி தக்காளி ரூ.600 வரையில் நேற்று விற்பனையானது. கோடை என்பதால் தற்போது பெரும்பாலான கிணறுகளில் தண்ணீர் இல்லை. எனவே குறைந்தளவு தண்ணீரை கொண்டு சில இடங்களில் மட்டுமே தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் வெளியூர்களில் இருந்தும் தக்காளி வரத்து குறைந்துள்ளது. எனவே தற்போது விலை அதிகரித்துள்ளது என்றார். இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

click me!