மெதுவாக சென்ற பேருந்தில் இருந்து வேகமாக கழன்று ஓடிய சக்கரம்; பழனியில் திடீரென அலறிய பயணிகள்

By Velmurugan s  |  First Published Jun 3, 2024, 5:18 PM IST

பழனி அருகே அரசு பேருந்தின் முன் சக்கர சக்கரம் கழன்று கழிவு நீர் ஓடையில் விழுந்தது. ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பயணிகள் காயம் இன்றி தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை வேப்பன்வலசிற்கு செல்லும் 16ம் எண் கொண்ட நகர பேருந்து பேருந்து, (TN57 N 1286) 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வேப்பன்வலசு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் முன் இடதுபுற சக்கரம் கழன்று சென்று வீடுகளின் அருகே இருந்த பெரிய கழிவு நீர் ஓடையில் விழுந்தது. 

பேருந்து சென்று கொண்டிருக்கும்போதே சக்கரம் கழன்றதால், பேருந்து நிலை தடுமாறியதில் பயணிகள் கூச்சலிட்டு அலறினர். ஓட்டுநர் சாமர்த்தியத்தியமாக பேருந்தை நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர். பழனி அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து முன் சக்கர கழன்றதில் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது. 

Latest Videos

யாரோ ஒருவரின் கட்டளையின் படி கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன - அமைச்சர் அதிருப்தி

3 ஆண்டுகளுக்கு முன் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தனது முதல் செயலாக, மகளிர் அனைவரும் தமிழக அரசு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டு அதனை நடைமுறைப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு பல தரப்பிலும் வரவேற்பு இருந்தது. ஆனால், இந்த திட்டத்தால் ஏற்கனவே நட்டத்தில் இயங்கி வந்த அரசு போக்குவரத்துக் கழகம் கடுமையான நிதி பற்றாக்குறையில் சிக்கி திண்டாடி வருகிறது. இதனால் அரசுப் பேருந்துகளை முறையாக பராமரிக்கவோ, போக்குவரத்து கழகத்தில் உள்ள பணியாளர் பற்றாக்குறையை போக்கவோ முடியாத நிலை நீடித்து வருவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கட்சியவே கலைச்சிட்டேன் என் மனைவி எப்படியாவது எம்.பி. ஆயிடனும்; கையில் வேப்பிலையுடன் சரத்குமார் அங்கபிரதட்சணம்

மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து பேருந்துகளும் ஆய்வு செய்யப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

click me!