தந்தையை முட்டி மோதிய ஜல்லிக்கட்டு காளை..! துணிச்சலுடன் செயல்பட்ட மகனுக்கு குவியும் பாராட்டு..!

By Manikandan S R S  |  First Published Nov 21, 2019, 5:42 PM IST

திண்டுக்கல் அருகே தந்தையை முட்டிய காளைமாட்டை அடங்கிய மகனை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர்.


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்தவர் மணிவேல். இவரது மகன் பூபதி. விவசாயியான மணிவேல், விளைநிலங்களுக்கு, காளை மாடும் வைத்துள்ளார். தினமும் மாட்டினை அங்கிருக்கும் பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது அவரது வழக்கம். சம்பவத்தன்றும் தனது காளை மாட்டினை வேடசந்தூர் புறவழிச்சாலையில் இருக்கும் ஐயர்மடம் என்கிற பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

அப்போது திடீரென மிரண்டு போன காளை மாடு துள்ளி குதித்திருக்கிறது. அதை ஆசுவாசப்படுத்த நினைத்த மணிவேலிடம் முரண்டு பிடித்த காளைமாடு அவரை முட்டித்தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த மணிவேல் குடல் சரித்து கீழே மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகன் பூபதி லாவகமாக செயல்பட்டு காளை மாட்டை அடக்கி தந்தையை மீட்டார். பின்னர் மணிவேலை அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

இதை அங்கிருந்தவர்கள் படம்பபிடிக்க, அது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. முரண்டு பிடித்த காளை மாட்டிடம் போராடி தந்தையை மீட்ட மகனை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர்.

click me!