ஏப்ரல் மாதத்தில் அரிசி ரேசன் கார்டு வைத்திருப்போருக்கு ரேசன் பொருட்கள் இலவசமாகவும் ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்தப் பணிகள் ஏப்ரல் 3ம் தேதி முதல் தொடங்கும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் இந்தப் பணியில் ஈடுபட முடியாது என்று தமிழ்நாடு பொதுவினியோக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
ரேசன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு ரூ. 1000 வழங்க முடியாது என்று பொது வினியோக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
undefined
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணாமாக ஏப்ரல் மாதத்தில் அரிசி ரேசன் கார்டு வைத்திருப்போருக்கு ரேசன் பொருட்கள் இலவசமாகவும் ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்தப் பணிகள் ஏப்ரல் 3ம் தேதி முதல் தொடங்கும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் இந்தப் பணியில் ஈடுபட முடியாது என்று தமிழ்நாடு பொதுவினியோக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் பால்ராஜ் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கொரோனா அச்சுறுத்தல் தற்போது உள்ள நிலையில் பொதுமக்களுக்கு பணமும், இலவச பொட்களும் வினியோகித்தால் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. ஊரடங்கு உத்தரவை தளர்த்தப்பட்ட பிறகு வேண்டுமானால் பணத்தை வினியோகம் செய்யலாம். ஒரு வேளை இந்தப் பணியைச் செய்ய ரேசன் ஊழியர்களை தமிழக அரசு வற்புறுத்தினால், நீதிமன்றத்தை நாடுவோம்” என்று தெரிவித்தார்.