2 மணிநேரம் இடைவிடாமல் கொட்டித்தீர்த்த கனமழை..! மக்கள் உற்சாகம்..!

By Manikandan S R S  |  First Published Mar 10, 2020, 5:03 PM IST

கொடைக்கானலில் கோடை காலத்திற்கு முன்பாக கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது பெய்த திடீர் மழையால் மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.நேற்று மாலை 5.30 மணியளவில் கொடைக்கானல் மலைகிராமங்களில் பெய்ய தொடங்கிய மழை இரவு 8 மணி வரை நீடித்தது. 


தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை ஜனவரியில் நிறைவு பெற்றது. அதன்பிறகு பனிக்காலம் தொடங்கி இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவி வந்தது. எனினும் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வெப்பமும் அதிகளவில் இருந்தது. இதனிடையே தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அவ்வப்போது பரவலாக மழை பெய்யத்தொடங்கியது. வெப்பச்சலனம் காரணமாக தென்மாவட்டங்களில் ஓரிரு நாட்கள் பலத்த மழை பெய்தது.

Tap to resize

Latest Videos

undefined

இந்தநிலையில் கொடைக்கானலில் கோடை காலத்திற்கு முன்பாக கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது பெய்த திடீர் மழையால் மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.நேற்று மாலை 5.30 மணியளவில் கொடைக்கானல் மலைகிராமங்களில் பெய்ய தொடங்கிய மழை இரவு 8 மணி வரை நீடித்தது. இதனால் வெயில் பிடியில் சிக்கியிருந்த மக்கள் வெப்பம் தணிந்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.  எனினும் தற்போது அங்கு பட்டாணி பயிரிடப்பட்டுள்ள நிலையில் மழையால் அவை பாதிப்பிற்குள்ளாகும் என்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

6ம் வகுப்பு மாணவியை மாறி மாறி கற்பழித்த கொடூரர்கள்..! ஆற்றுப்பகுதியில் ஆடைகளை அவிழ்த்து அட்டூழியம்...!

இரண்டரை மணிநேரம் இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழையால் கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன்காரணமாக மின்கம்பங்கள் சரிந்து விழுந்து மின்சாரம் தடைபட்டது. மழைக்காலங்களில் கொடைக்கானல் பகுதியில் மின்சாரம் தடைபடுவது தொடர்கதையாகி வருகிறது. எனவே உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடக காதலால் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த அக்கிரமம்..! புகைப்படம் எடுத்து மிரட்டிய காதலன்..!

click me!