அடுத்தடுத்து தூக்கில் பிணமாக தொங்கிய இளம் தம்பதி..! பரிதவிக்கும் ஒன்றரை வயது குழந்தை..!

Published : Jan 29, 2020, 01:45 PM IST
அடுத்தடுத்து தூக்கில் பிணமாக தொங்கிய இளம் தம்பதி..! பரிதவிக்கும் ஒன்றரை வயது குழந்தை..!

சுருக்கம்

பிரேத பரிசோதனைக்கு பிறகு பவித்ராவின் உடலுக்கு உறவினர்கள் இறுதிச்சடங்குகள் நடத்தினர். மனைவி இறந்த துக்கத்தில் மனஉளைச்சலில் இருந்த வீரணன், சுடுகாட்டில் இருந்து வீட்டிற்கு திரும்பிய பின் வீட்டின் பின்புறம் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி அருகே இருக்கிறது நாடார்ப்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் வீரணன்(25). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பவித்ரா(22) என்கிற பெண்ணிற்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு பவிக்ஷா என்கிற ஒன்றரை வயது பெண்குழந்தை இருக்கிறது.

பவித்ராவிற்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வீரணன் மற்றும் உறவினர்கள் பவித்ராவின் உடலைக்கண்டு கதறி துடித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் பவித்ராவின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். தற்கொலை குறித்து வழக்குபதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

பிரேத பரிசோதனைக்கு பிறகு பவித்ராவின் உடலுக்கு உறவினர்கள் இறுதிச்சடங்குகள் நடத்தினர். மனைவி இறந்த துக்கத்தில் மனஉளைச்சலில் இருந்த வீரணன், சுடுகாட்டில் இருந்து வீட்டிற்கு திரும்பிய பின் வீட்டின் பின்புறம் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலையும் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒன்றரை வயதில் குழந்தையை தவிக்கவிட்டு கணவன் மனைவி தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read: 'கலெக்டர்ல இருந்து எல்லாரையும் அவங்க கவனிக்கிறாங்க.. விட்டுரு'..! மணல் கடத்தலுக்கு ஆதரவாக வி.ஏ.ஓ வை மிரட்டிய வருவாய் அதிகாரி..!

PREV
click me!

Recommended Stories

கல்யாணமான 13 நாட்களில் புதுமாப்பிள்ளை விபரீத முடிவு! நெஞ்சில் அடித்து கதறும் குடும்பம்! மனைவி அப்படி என்ன செய்தார்?
தலை தீபாவளி அதுவுமா எவ்வளவு சொல்லியும் கேட்காத கணவர்! இருந்தாலும் ரூபியாவுக்கு இவ்வளவு கோபம் இருக்கக்கூடாது