திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு உள்ள டோல்கேட்டில் இருந்து வேகமாக கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, சைக்கிளில் சாலையை கடக்க முயன்றவர் மீது மோதாமல் இருக்க காரை வேகமாக திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்த எதிர் திசையில் சென்றது. அப்போது, எதிர்சையில் வந்த மற்றொரு கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் கார்கள் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திண்டுக்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு உள்ள டோல்கேட்டில் இருந்து வேகமாக கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, சைக்கிளில் சாலையை கடக்க முயன்றவர் மீது மோதாமல் இருக்க காரை வேகமாக திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்த எதிர் திசையில் சென்றது. அப்போது, எதிர்சையில் வந்த மற்றொரு கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் கார்கள் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
undefined
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மற்றொருவரும் உயிரிழந்தார். சாலை விபத்தில் வெள்ளையன், மைந்தன், ஜெயந்தா, மணி, ஜெபக்கனி உள்பட 5 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 2 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சுமார் ஒரு நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.