பழனி பஞ்சாமிர்தம் விலை உயர்வு: பக்தர்கள் அதிருப்தி!

By Manikanda Prabu  |  First Published Sep 18, 2023, 3:40 PM IST

பழனி பஞ்சாமிர்தம் விலை உயர்த்தப்பட்டுள்ளது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது


பழனி கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தம்  விலையை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சேவை நோக்கத்தை மறந்து லாபநோக்கத்தில் செயல்படும் பழனி திருக்கோவில் நிர்வாகத்தின் செயல் பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகை தருகின்றனர். பழனி முருகன் கோவிலின் பிரசித்தி பெற்ற பிரசாதமாக பஞ்சாமிர்தம் விளங்குகிறது.  மலைவாழை, கற்கண்டு, நெய், கரும்புசர்க்கரை, தேன் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சுவைமிகுந்ததாக தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் பிரசாதமானது அதிகளவில் பக்தர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

Tap to resize

Latest Videos

undefined

கோவில் நிர்வாகம் சார்பில் மலைக்கோயில், கிரிவீதி, பேருந்துநிலையம் போன்ற இடங்களில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுகிறது. 455கிராம் நிகர எடை கொண்ட பஞ்சாமிர்தம் பிளாஸ்டிக் டப்பா ரூபாய் 35க்கும், பஞ்சாமிர்தம் டின் ரூபாய் 40க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

சீன அதிபர் ஏன் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை? வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரத்யேக பேட்டி!

இந்த நிலையில், பஞ்சாமிர்தம் விற்பனை விலையானது நேற்று முதல் முன்னறிவிப்பின்றி திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பஞ்சாமிர்த டப்பா மற்றும் டின் வகைகளுக்கு தலா ரூ. 5 உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அரைக்கிலோ எடைகொண்ட பிளாஸ்டிக் டப்பா பஞ்சாமிர்தம் ரூபாய் 35க்கும், டின் வகை பஞ்சாமிர்தம் ரூபாய் 45க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பழனி முருகனின் அருட் பிரசாதமான பஞ்சாமிர்த விற்பனையை திருக்கோவில் நிர்வாகம் சேவையாக பார்க்காமல் லாபநோக்கத்தில் செயல்படுவது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாதம் பலகோடி ரூபாய் வருமானம் தரும் பழனி கோவில் பிரசாதத்தின் விலையை உயர்த்தியது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  அரைக்கிலோ பஞ்சாமிர்தம் 25ரூபாய் மற்றும் 30ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளாக விலை உயர்த்தப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும்  பஞ்சாமிர்த பிரசாத விலையை முன்னறிவிப்பின்றி பழனி திருக்கோவில் நிர்வாகம் திடீரென உயர்த்தியுள்ளது.

click me!