திண்டுக்கல்லில் கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல்; பதற்றம் காரணமாக போலீசார் குவிப்பு

By Velmurugan s  |  First Published Jun 14, 2023, 10:58 AM IST

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே, மல்லையாபுரத்தில் கோவில் திருவிழாவின் போது இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் கைது செய்யப்பட்டதால், ஒரு பிரிவினர், தாங்கள் கொடுத்த புகாருக்கு  நடவடிக்கை எடுக்க கோரி, காவல் நிலையத்தை  முற்றுகையிட்டதால் பரபரப்பு.


திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே மல்லையாபுரத்தில் அனைத்து சமுதாயத்தினர் வழிபடும், மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன் கோவில் திருவிழா, கடந்த 28ம் தேதி தொடங்கி, 1ம் தேதி வரை நடைபெற்றது. இதில், கடந்த 1ம் தேதி, இரு பிரிவினர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. 

இதில், ஒரு பிரிவினரைச் சேர்ந்த, காளிதாஸ் (வயது 21)  என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர், சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, காளிதாஸ் கொடுத்த புகார் பேரில், செம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து,  திங்கள்கிழமை காளிதாஸை தாக்கியதாக, மல்லையாபுரத்தைச் சேர்ந்த  சேதுபதி, சின்னபாண்டி, மோகன், மன்மதன், கருப்பு ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

Tap to resize

Latest Videos

undefined

மேலும், அஜித், அருண்பாண்டி ஆகியோரை  காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில், அதேபோல், கடந்த 28ம் தேதி, திருவிழாவின் போது, ஒரு பிரிவை சேர்ந்த மொக்கவீரன்  மகன் அஜித் (20) என்பவரை, மற்றொரு பிரிவை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என,  திங்கள்கிழமை  அஜித்தின் தந்தை மொக்கவீரன்  செம்பட்டி காவல் நிலையத்தில், புகார் செய்தார். 

செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - நாராயணன் திருப்பதி கருத்து

இந்நிலையில், தாங்கள் கொடுத்த புகாருக்கு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரி  திங்கள்கிழமை மாலையில், மல்லையாபுரம் கோவில் முன்பு பெண்கள் உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர், ஒரே இடத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், செம்பட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில், மல்லையாபுரத்தில் இரவு முழுவதும் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

“செந்தில் பாலாஜி கைது” தேர்தல் நெருங்கும்போது இன்னும் பல வேலைகளை செய்வார்கள் - சீமான் கருத்து

இந்நிலையில், இன்று மல்லையாபுரத்தைச் சேர்ந்த, ஒரு பிரிவினர் பெண்கள் உட்பட சுமார் 200 பேர், செம்பட்டி காவல் நிலையத்தை திடீர் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி, மொக்கவீரன் கொடுத்த புகாருக்கு, காளிதாஸ் உட்பட 6 பேர் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டதாக, முற்றுகையிட்டவர்களிடம்  தெரிவித்ததை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

click me!