பழனியில் தாய், தந்தை வீட்டில் அடிக்கடி சண்டை போட்டு கொள்வதால் மனமுடைந்த 8ம் வகுப்பு சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தெற்கு அண்ணா நகர் பகுதிசையச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கவிதா. இவர்களது மகள் தேவதர்ஷினி (வயது 13). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக கணவன் செந்தில்குமாரும், மனைவி கவிதாவும், அடிக்கடி சண்டை போட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால், கவிதா கோபித்துக் கொண்டு, பொள்ளாச்சி அருகே உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் சிறுமி தேவதர்ஷினி விரக்தியடைந்ததாகக் கூறப்படுகிறது.
undefined
திருவாரூரில் ஓர் உலக அதிசயம்; தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய அன்பு மகன்
இதனைத் தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத பொழுது தனது தாயாரின் சேலையால், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பழனி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சனிக்கிழமைகளிலும் பள்ளி செயல்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ் திட்டவட்டம்
இதுகுறித்து பழனி நகர காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய், தந்தை வீட்டில் அடிக்கடி சண்டை போட்டு கொண்டதை பார்த்து மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.