திண்டுக்கல் மாவட்டத்தில் குடிசை வீட்டில் ஏற்பட்ட மின் கசிவால் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே மம்மானியூரைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி நல்லம்மாள். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு அழகுமீனா(வயது 16), போதுமணி(14), முத்துச்சாமி(12), குமார்(6), புவனேஸ்வரி(2) என ஐந்து குழந்தைகள் உள்ளன.
வீட்டு கதவில் கடந்த இரண்டு நாட்களாக மின்க்கசிவு ஏற்படுவதாக அய்யலூர் மின்வாரியத்திற்கு தகவல் அளித்துள்ளார்கள். மழைக்காலம் என்பதால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே மின் கசிவு ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் கூறியுள்ளார்கள். அங்கு வந்த அதிகாரிகள் மின் கசிவு ஏதும் இல்லை என்று கூறிவிட்டு சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்நிலையில் இன்றும் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக புகாரளித்தும் அதிகாரிகள் அலட்சியமாக எடுத்துக் கொண்டு வராத நிலையில் அழகு மீனாவும், குமாரும் தங்களுடைய குடிசை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் இரண்டு குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.
என்னங்க வைத்தியம் பாக்குறீங்க? ஜிப்மரில் மருத்துவர்களை லெப்ட் ரைட் வாங்கிய அதிமுக செயலாளர்