பாலக்கோடு அருகே புதிய மதுபானக்கடைக்கு எதிர்ப்பு; மீறி திறந்தால் ... பெண்கள் எச்சரிக்கை

By Velmurugan s  |  First Published Oct 27, 2023, 2:48 PM IST

பாலக்கோடு அருகே தோமலஅள்ளி கிராமத்தில் புதிய அரசு மதுபானக் கடையை திறக்க பெண்கள் எதிர்ப்பு. மீறி திறந்தால் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை இடப்படும் என எச்சரிக்கை.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே தோமலஅள்ளி கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் எதிர்ப்பினால் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க முற்பட்டதால், 100க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என கூறி டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடையை  திறந்தால் வெளியூர் பகுதியில் இருந்து ஏராளமானோர் மது அருந்த வருவார்கள் இதனால் அதிகமான வாகன போக்குவரத்து ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்றும், மேலும் டாஸ்மாக் கடை வழியாக பள்ளியில் படிக்கும்  மாணவ, மாணவிகள், பெண்கள் அவ்வழியாக  சென்று வர முடியாத சூழல் ஏற்படும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tap to resize

Latest Videos

கைக்குழந்தையுடன் வீட்டு வாசலில் நின்ற பெண்ணை முட்டி துரத்திய பசு; வீடியோ வெளியாகி பரபரப்பு

மேலும் எங்கள் கணவன்மார்கள் காதில், கழுத்தில் உள்ளதையும் பிடுங்கி சென்று குடித்தே அழித்து விடுவார்கள். ஊரில் உள்ள இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் மதுவிற்கு அடிமையாக மாறி எதிர்காலம் பாதிக்கும் சூழல் உருவாகும்  என்பதால் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என பெண்கள்  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பொதுமக்களின் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடையை திறந்தால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பேராட்டம் நடத்த போவதாக  எச்சரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் தலைமையில் பேச்சுவர்த்தை நடத்தி டாஸ்மாக் கடை திறக்க பட மாட்டாது என உறுதியளித்தன் அடிப்படையில் பெண்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்ததால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

click me!