தருமபுரியில் சிறுமியை கர்ப்பமாக்கிய சிறப்பு காவல் ஆய்வாளர் போக்சோவில் அதிரடி கைது

By Velmurugan s  |  First Published Nov 20, 2023, 6:03 PM IST

தருமபுரியில் சிறுமியை கர்ப்பமாக்கிய சிறப்பு உதவி ஆய்வாளரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தருமபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த நெருப்பூர் மணியகாரன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன் (வயது 50). இவர் ஏரியூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஏரியூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண்ணுடன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது இளம் பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் பழகியதாக கூறப்படுகிறது. அந்தப் பெண்ணுக்கு தற்போது ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. 

பெற்ற குழந்தையை விலை பேசி விற்ற தாய்; மருத்துவர்களின் குறுக்கு விசாரணையால் சிக்கிய 4 பேர்

Tap to resize

Latest Videos

அப்பெண் 18 வயது பூர்த்தி அடைவதற்கு முன்பே குழந்தை பெற்றதால் எவ்வித புகாரும் சகாதேவன் மீது காவல் நிலையத்தில் கொடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 18 வயது பூர்த்தி அடைந்ததையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்களிடம்  தன் மகளை திருமணம் செய்வதாகக் கூறி கர்பமாக்கி  ஏமாற்றியதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதனை அடுத்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் பென்னாகரம் மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சகாதேவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தன் மீது வழக்கு பதியபட்டதை அறிந்த சகாதேவன் தலைமறைவாக இருந்து வந்தார். தலைமறைவாக இருந்த அவர் இன்று பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து காவல் துறையினர் அவரை போக்சோ வழக்கின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சகாதேவன் தருமபுரி நகர காவல் நிலையத்தில் பணியாற்றிய போது காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்களை திருடி விற்றதில் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சிறையில் இருந்து வெளியில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!