Fish Market | சுற்றுலா தளங்களில் அழுகிய மீன்கள் விற்பனை! 92 கிலோ மீன் பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை!

By Dinesh TG  |  First Published Jun 23, 2023, 9:20 AM IST

ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் மீன் விற்பனை கூடத்தில் அழுகிய நிலையில் வைக்கப்பட்டிருந்த 92 கிலோ மீன்களை பறிமுதல் செய்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 


ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் மீன் விற்பனை கூடத்தில் அழுகிய நிலையில் வைக்கப்பட்டிருந்த 92 கிலோ மீன்களை பறிமுதல் செய்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தும், பரிசல் சவாரி செய்த பின்பு அம்மியில் அரைத்து சமைக்கப்படும் சுவையான மீன் குழம்பை ருசித்து செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள மீன் கூடங்களில் அழுகிய நிலையில் உள்ள பழைய மீன்களை விற்பனை செய்து வந்ததும் அதனை உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கண்டுபிடித்து கெட்டுப்போன மீன்களை அளித்தனர்.

இந்நிலையில் மீண்டும் பொதுமக்களின் அடுக்கடுக்கான புகார்கள் அதிக அளவில் சென்றதால், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மருத்துவர் பானு சுஜாதா தலைமையில் பென்னாகரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கந்தசாமி மற்றும் ஒகேனக்கல் மீன்வளத்துறை அலுவலர் வேலுச்சாமி மற்றும் ஒகேனக்கல் மீன்வளத்துறை பணியாளர்கள் ஒன்றிணைந்து திடீரென ஒகேனக்கல் மீன் விற்பனை கூடம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

Tap to resize

Latest Videos



இதனை அடுத்து மீன்கள் மீது பார்மலின் கெமிக்கல் பூசப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்று மீன்களை ஆய்வுக்கு உட்படுத்தினர் அப்பொழுது மீன்களில் எவ்வித பார்மிலினும் கலக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர், அனைத்து கடைகளிலும் சோதனையிட்டதில் ஒரு சில கடைகளில் இருந்து தரமற்ற முறையில் அழுகிய நிலையில் இருந்த 92 கிலோ மீன்கள் பிடிக்கப்பட்டு மண்ணில் குழி தோண்டி மீன்கள் புதைக்கப்பட்டன. மேலும் இது சம்பந்தமாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள் மீன் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கி மீண்டும் இது போல் அழுகிய நிலையில் உள்ள மீன்களை விற்பனைக்கு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர் .

click me!