சாலையில் தாறுமாறாக ஓடிய சரக்கு வாகனம்... லாரி, ஆம்னி பேருந்துடன் அடுத்தடுத்து மோதல்... 2 பேர் உயிரிழப்பு..!

By vinoth kumarFirst Published Jul 30, 2019, 5:13 PM IST
Highlights

தருமபுரியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த சரக்கு வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற சரக்கு வாகனத்தின் மீது மோதியது. பின்னர், சாலைத்தடுப்பை உடைத்துக்கொண்டு எதிர் திசையில் வந்த ஆம்னி பேருந்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

ஐதராபாத்தில் இருந்து மதுரைக்கு அரிசி லோடு ஏற்றிய சரக்கு வாகனம் இன்று காலை தொப்பூர் கணவாயில், சென்று கொண்டிருந்தது. தாழ்வான சாலையில் வேகமாக சென்றதால், ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து, முன்னே சென்ற மற்றொரு சரக்கு வாகனத்தின் பின்னால் மோதியதுடன், சென்டர் மீடியனை தாண்டி எதிர்சாலையில் சென்றது. 

அப்போது, எதிரே கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி வந்துகொண்டிருந்த ஆம்னி பேருந்து ஓட்டுனர், சரக்கு வாகனம் தாறுமாறாக வருவதை பார்த்து, இடது புறமாக ஒதுங்கியதால், நேருக்கு நேர் மோதாமல் பக்கவாட்டில் மோதி கவிழ்ந்தது. இதில், சரக்கு வாகனத்தின் ஓட்டுனர் ரமேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆம்னி பேருந்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும், 11 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!