மருத்துவமனையில் தவறான சிகிச்சை... வலிப்பு ஏற்பட்டு நிறைமாத கர்ப்பிணி உயிரிழப்பு..!

Published : Jun 30, 2019, 05:48 PM ISTUpdated : Jun 30, 2019, 05:51 PM IST
மருத்துவமனையில் தவறான சிகிச்சை...  வலிப்பு ஏற்பட்டு நிறைமாத கர்ப்பிணி உயிரிழப்பு..!

சுருக்கம்

தருமபுரியில் தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தருமபுரியில் தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தருமபுரி குமாரசாமிபேட்டையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மனைவி அபிராமி. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் தற்போது தான் அபிராமி கருத்தரித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான அபிராமி வழக்கமான பரிசோதனைக்காக ஸ்ரீ அன்னை என்ற தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சனிக்கிழமை இரவு அந்த மருத்துவமனைக்கு சென்ற அபிராமிக்கு மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் செவிலியர் சிகிச்சை அளித்ததாகவும், ஊசி போட்டதாகவும் புகார் கூறப்படுகிறது.

அப்போது, ஊசி போட்ட உடனே அபிராமிக்கு வலிப்பு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஆக்ஜிசன் குறைவாக இருப்பதாக கூறி அப்பெண்ணை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது, ஏற்கெனவே அபிராமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி விட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சடலத்தை வாங்க மறுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தவறான சிகிச்சையால் அபிராமி உயிரிழந்தார் என குற்றம்சாட்டினர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சமரம் செய்து முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதன் பேரில் மறியலைக் கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். 

PREV
click me!

Recommended Stories

பாம்பை கழுத்தில் போட்டு கொண்டு டாஸ்மாக் கடைக்கு வந்த இளைஞர்! அலறி ஓடிய குடிமகன்கள்!
தர்மபுரி மாவட்ட அங்கன்வாடி மையங்களில் வேலைவாய்ப்பு: 135 காலிப்பணியிடங்கள்! முழு விவரங்களுக்கு…