அதிர்ச்சி.. பிஸ்லரி குடிநீர் பாட்டிலில் இறந்து கிடந்த கொசு..!

By vinoth kumar  |  First Published Apr 14, 2022, 11:12 AM IST

குடிக்கும் நீரையும், சுவாசிக்கும் காற்றையும் காசு கொடுத்து வாங்குவது என்பது சுற்றுச்சூழலுக்கு இழைத்த கொடுமைகளின் விளைவுகள் என்றே கூறலாம். ஆனால், அப்படி விலைக்கொடுத்து வாங்கும் குடிநீரும் சுகாதாரமற்ற முறையில் இருந்தால் என்ன செய்ய முடியும். 


தருமபுரி பேருந்து நிலையத்தில் வாங்கிய பிஸ்லரி குடிநீர் பாட்டிலில் கொசு இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிஸ்லரி குடிநீர் பாட்டில்

Tap to resize

Latest Videos

குடிக்கும் நீரையும், சுவாசிக்கும் காற்றையும் காசு கொடுத்து வாங்குவது என்பது சுற்றுச்சூழலுக்கு இழைத்த கொடுமைகளின் விளைவுகள் என்றே கூறலாம். ஆனால், அப்படி விலைக்கொடுத்து வாங்கும் குடிநீரும் சுகாதாரமற்ற முறையில் இருந்தால் என்ன செய்ய முடியும். இந்நிலையில், தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தங்களது சொந்த வேலைக்காக சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை பெங்களூரு மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றர்.

மேலும் தமிழகம் முழுவதும் கோடைக்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளதால் பேருந்து நிலையங்களில் நீர், மோர், தர்பூசணி, இளநீர், வெள்ளரிகாய், குளிர்பானங்கள் உள்ளிட்டவை தாகத்தை தணிக்கும் வகையில் விற்பனை செய்து வருகின்றனர்.

மிதந்த கொசு

இந்நிலையில், தருமபுரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சேலம் செல்வதற்காக வந்த செந்தில் ராஜா என்பவர் அங்கு கடை ஒன்றில் பிரபல பிஸ்லரி குடிநீர் பாட்டிலை வாங்கியுள்ளார். பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீர் சுகாதாரமாக இருக்கும் நம்பிக்கையில் செந்தில் ராஜா வாங்கினார். அந்த வாட்டர் பாட்டிலின் உள்ளே தண்ணீரில் கொசு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த  தரமற்ற தண்ணீரை வினியோகித்த பிஸ்லரி வாட்டர் கம்பெனி மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதாக செந்தில்ராஜா தெரிவித்துள்ளார். 

click me!