ஐயோ! என் காதலன் சாவுக்கு நானே காரணம் ஆயிட்டேனே.. அவன் இல்லாத உலகத்துல எனக்கு என்ன வேலை..!

By vinoth kumar  |  First Published Nov 21, 2023, 1:48 PM IST

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்துள்ள மோளையானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அகில் பிரியா (20). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருந்துக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் உறவினரான ஸ்டாலின் என்பவரை காதலித்து வந்துள்ளார். 


காதலன் விபத்தில் சிக்கி உயிரிழந்ததால் மனவேதனையில் இருந்த காதலி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்துள்ள மோளையானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அகில் பிரியா (20). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருந்துக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் உறவினரான ஸ்டாலின் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், தீபாவளிக்கு அகில் பிரியா தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் பண்டிகை முடித்துவிட்டு கோவை செல்வதற்காக கடந்த 14-ம் தேதி சென்றுள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- நெல்லையில் பயங்கரம்! தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் அலுவலகம் மீது 3 நாட்டு வெடிகுண்டு வீச்சு! சிறுவன் கைது!

அப்போது தன் காதலனை சந்திப்பதற்காக போன் செய்து சேலம் வர சொல்லியிருந்திருக்கிறார். இதனால் ஸ்டாலின் ஆசை ஆசையாய் காதலியை பார்ப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் கோவையில் இருந்து சேலத்திற்கு வந்திருக்கிறார். அப்போது அயோத்தியபட்டினம் ராமர் கோயில் அருகே வந்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஸ்டாலின் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதையும் படிங்க;-  தீபத்துக்கு தி.மலைக்கு போறீங்களா? கூட்ட நெரிசல் இல்லாமல் குளு குளுனு செல்ல போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடு!

தனது காதலன் தன்னால்தான் இறந்து விட்டான் என அகில் பிரியா மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இதனால் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அகில் பிரியா உயிரிழந்தார். . இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!