தருமபுரியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

By Velmurugan s  |  First Published Aug 11, 2023, 6:41 PM IST

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா திண்டல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒடச்சகரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாது. இவரது மனைவி மாதம்மாள். இவர்களுக்கு பெருமாள் என்ற ஒரு மகன் உள்ளார். இன்று காலை மாதம்மாள் தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் இருந்து மின் கம்பத்தில்  வரும் துணை கம்பியில் ஏற்கனவே கட்டப்பட்டிருந்த கம்பி ஒன்று அறுந்து கீழே கிடந்துள்ளது அருந்த கம்பியை மீண்டும் எடுத்து கட்டுவதற்காக மாதம்மாள்  கம்பிகளில் போடும்போது ஏற்கனவே இபி கம்பத்திலிருந்து பாய்ந்து கொண்டிருந்த மின்சாரம் தாக்கியது.

அலறல் சத்தம் கேட்டு மாதம்மாள் கணவர், மாதுவின் சகோதரி சரோஜா மற்றும் மாதம்மாள் மகன் பெருமாள் ஆகியோர் மகனை காப்பாற்ற சென்றுள்ளனர். அப்போது அவர்களும் மின்சாரம் தாக்கியதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Tap to resize

Latest Videos

தாய்க்கு வலை விரித்து மகளையும் வளைத்துப்போட்ட காமுகன்; 4 பேருடன் உல்லாசம் இறுதியில் போக்கோவில் கைது

இது குறித்து காரிமங்கலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மூன்று உடல்களையும் கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காரிமங்கலம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மகள் உள்ளிட்ட மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காதலனுடன் பேசிக்கொண்டிருந்த சிறுமியை கடத்திச் சென்று 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை; திருப்பூரில் பயங்கரம்

click me!