கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்த போது விபத்து; சிறுவன் உள்பட 2 பேர் பலி

By Velmurugan s  |  First Published May 24, 2023, 11:44 AM IST

தர்மபுரி மாவட்டத்தில் கோவில் திருவிழாவின் போது வெடி வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


தர்மபுரி மாவட்டம் சிந்தல்பாடி அருகே உள்ள சி.பள்ளிப்பட்டி கிராமத்தில் கடந்த இரு தினங்களாக மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு சாமி ஊர்வலம் நடைபெற்றது. சாமியை அலங்கரித்து டாடா ஏசி மினி லாரியில் வைத்து பொதுமக்கள் ஊர் வலம் எடுத்து சென்றனர்.

Latest Videos

மினி லாரியை அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ராகவேந்திரன் (வயது 26) என்பவர் ஓட்டி சென்றார். வீதி உலாவில் வான வேடிக்கைகள் நிகழ்த்த பட்டாசுகள் வெடித்தனர். மேலும் வெடிப்பதற்காக பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்கள் டாடா ஏசி மினி லாரியில் வைத்திருந்தனர். ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தபோது பட்டாசு மின் கம்பத்தில் பட்டு டாட்டா ஏசி மினி லாரியில் விழுந்தது.

திண்டுக்கல்லில் மது அருந்த பணம் தராத செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு கத்தி குத்து

அப்போது எதிர்பாராத விதமாக வாகனத்தில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் சரக்கு வாகனம் தீப்பற்றி எரிந்தது. இதில் ராகவேந்திரன், நொச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் ஆதி (50) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பட்டாசு வெடித்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அசோகன் மகன் ஆகாஷ் (7) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சேலத்தில் ஆம்புலன்ஸ் மோதி தூக்கி வீசப்பட்ட தாத்தா, பேரன்; சிசிடிவியில் பதிவான பரபரப்பு காட்சி

படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராகவேந்தின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மொரப்பூர்  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!