பாம்பு கடித்து சிறுமி பலி; அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன உயிர்?

By Velmurugan s  |  First Published May 22, 2023, 1:19 PM IST

தர்மபுரி மாவட்டத்தில் பாம்பு கடித்து 3 வயது சிறுமி உயிரிழந்ததைத் தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டது.


தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெனசி கிராமத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி (வயது 39). இவரது இரண்டாவது மகள் சஷ்மிதா ஸ்ரீ (3) வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது நாகப்பாம்பு குழந்தையை கடித்துள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக பூதநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத நிலையில் 2 செவிலியர்கள் மட்டுமே பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கிருந்த செவிலியர்கள் இங்கு பாம்பு கடிக்கு மருந்து இல்லை என்று கூறி பாப்பிரெட்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சிறுமி பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

Tap to resize

Latest Videos

மதுபோதையில் தகராறு செய்த ராணுவ வீரர்; கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த இளைஞர்கள்

இதனால் அதிர்ச்சியடைந்த   உறவினர்கள்  பூதநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு பாம்பு கடிக்கு மருந்து இருந்தும் சிறுமிக்கு சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள், செவிலியர்கள் மீது உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கணவன், மனைவி பிரச்சினையில் குறுக்கே வந்த மாமியாருக்கு கத்திகுத்து

இது குறித்து தகவலறிந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் கௌரிசங்கர் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் லதா மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் அடிப்படையில். உறவினர்களும், பொதுமக்களும் கலைந்து சென்றனர்.

click me!