கடலூர் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கடலூர் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (48). இவர், அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர். இன்று காலை அவர் பண்ருட்டியில் இருந்து கடலூருக்கு காரில் வந்துக்கொண்டிருந்தார். நெல்லிக்குப்பம் அருகே கார் வந்துக்கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.