சிதம்பரம் கோவிலில் இருக்கும் சித்திரசபையில் ரகசிய பூஜை ரகசிய பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு வாய்ந்த ஆருத்ரா மகா தரிசனம் நிகழ்ந்தது. நடராஜர் ஆடவல்லான் கோலத்தில் ஆனந்த தாண்டவமாடி கோவிலை வலம் வந்தார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருக்கும் நடராஜர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆடவல்லான் கோலத்தில் காட்சி தரும் சிவபெருமானை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இந்த கோவிலில் ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனித்திருமஞ்சனமும் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சிவ பக்தர்களால் கருதப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான ஆருத்ரா தரிசன திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த 1 ம் தேதி கோவிலில் கொடியேற்றம் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அபிஷேங்கள் மற்றும் அலங்காரங்கள் நடந்து சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது. நேற்று திருக்கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் இன்று நடைபெற்றது. இதற்காக ஆயிரங்கால் மண்டபத்தில் ராஜ அலங்காரத்தில் நடராஜர் காட்சி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
சிதம்பரம் கோவிலில் இருக்கும் சித்திரசபையில் ரகசிய பூஜை ரகசிய பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு வாய்ந்த ஆருத்ரா மகா தரிசனம் நிகழ்ந்தது. நடராஜர் ஆடவல்லான் கோலத்தில் ஆனந்த தாண்டவமாடி கோவிலை வலம் வந்தார். அதை பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.