சினிமாவை மி்ஞ்சிய பரபரப்பு கடத்தல் சம்பவம்; 2 மணி நேரத்தில் கிளைமேக்ஸ் எழுதிய போலீஸ் - சென்னையில் பரபரப்பு

By Velmurugan s  |  First Published May 25, 2024, 6:02 PM IST

சென்னையில் இளம் பெண் செவிலியரை காரில் கடத்திச் சென்ற நபர்களை செங்கல்பட்டில் மடக்கி பிடித்த காவல் துறையினர் இளம் பெண்ணை மீட்ட நிலையில், 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 21 வயது இளம் பெண் ஒருவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். இன்று காலை அவர் வழக்கம் போல் பணிக்கு சென்ற நிலையில், அவரை திடீரென வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று காரில் கடத்திச் சென்றுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில் காவல் துறையினர் துரித விசாரணையை மேற்கொண்டனர். அப்போது இளம் பெண்ணை கடத்திச் சென்ற கார் செங்கல்பட்டு வழியாக தென் மாவட்டத்தை நோக்கி செல்வதை காவல் துறையினர் உறுதி செய்தனர். இதையடுத்து சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி மற்றும் சோதனை சாவடிகளில் காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

Tap to resize

Latest Videos

undefined

அச்சச்சோ என்ன இவ்ளோ ஆச்சாரமா பேசறேல்? காஞ்சியில் வீதிக்கு வந்த வடகலை, தென்கலை பிரச்சினை

அப்போது செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூர் சுங்கச்சாவடியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த காரை மடக்கி சோதனை செய்த போது அதில் கடத்தப்பட்ட இளம் பெண் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக தப்பியோட முயன்ற நான்கு பேரை கைது செய்த காவல் துறையினர் அச்சரப்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இளம் பெண்ணும், காரைக்குடியில் உள்ள தனது அத்தை மகனான சபாபதியும் (27). சிறு வயது முதலே காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆறு மாத காலமாக இளம்பெண் சபாபதியிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். 

இனி நமக்குள்ள சண்டை வேண்டாம்; சமாதானமா பொயிடலாம் - சர்ச்சை காவலருடன் சிர்யர்ஸ் செய்த நடத்துநர்

இதனால் ஆத்திரமடைந்த சபாபதி (27) தனது நண்பர்களான ஹரிஹரன் (20), அஜய் (25), மற்றும் ராஜேஷ் (39). ஆகியோருடன் சேர்ந்து அப்பெண்ணை கடத்தி திருமணம் செய்ய முயன்றது தெரிய வந்தது. தொடர்ந்து நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!