மகனை காப்பாற்ற தாயின் பாச போராட்டம்...!! குழியிலிருக்கும் சுஜித்கு பை தைத்துக்கொடுத்த அன்புத் தாய்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 26, 2019, 1:22 PM IST
Highlights

உடனே  இதைக்கண்ட சுர்ஜித் தாய் என் மகனை மீட்க பைதானே வேண்டும்... இதோ  நானே பை தைத்து தருகிறேன் நீங்கள் வேலையை கவனியுங்கள் எனக் கூறி. விட்டில் இருந்த தையல் மெஷினில் கண்ணீர்சிந்தியபடி தனது மகனுக்கு மடமடவென ஒரு துணிப்பையை தைத்து கொடுத்தார். அதைக்கொண்டு  மீட்பு படையினர்  ஆழ் துளையில் அசைவின்றி கிடக்கும் சுர்ஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் வீட்டின் அருகே உள்ள நிலத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்டு, மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக்குள் 2 வயது சிறுவன் சுஜீத் வில்சன் விழுந்தான்.  நேற்று (அக்.,25) மாலை 5.40 மணியளவில் ஆழ்துளைக்குள் விழுந்த குழந்தையை கேமிரா, மைக், ஆக்சிஜன் உள்ளிட்ட கருவிகளுடன் மீட்கும் பணி நடந்து வருகிறது.  அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி கலெக்டர் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் இருந்து, அடுத்த என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். தற்போது சென்னையில் இருந்து பேரிடம் மீட்புக் குழுவும் நடுகாட்டுபட்டிக்கு விரைந்துள்ளது

 

இதுவரை எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்ததால், கடைசி முயற்சியாக நவீன கருவிகளை கொண்டு மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 27 அடியில் இருந்து 70 அடி ஆழ்திற்கு சென்று விட்ட குழந்தையின் கைகளில் கயிறு கட்டி எடுக்கலாமா என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம், ஆழ்துளையை சுற்றி 4 புறங்களிலும் பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வருகிறது. குழந்தையை மீட்க மத்தியக் குழுவின் உதவியையும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 27 அடியில் இருந்த சிறுவன் 70 அடி ஆழத்திற்கு சென்றுள்ளதால் ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுர்ஜித் முகம் , கைகள் மண்மூடி நிலையில் அசைவின்றி ஆழ் துளை கிணற்றில் உள்ளார். இந்நிலையில் இடுக்கிப்போன்ற கருவியைக் கொண்டு சிறுவனை மீட்க போராடி வருகின்றனர். இந்த நிலையில் குழந்தையை அலேக்காக தூக்க உறைபோன்ற ஒரு பை தேவைப்படுகிறது என மீட்புக்குழுவினர் கோரினர். அந்தப் பைக்காக அங்கும் இங்கும் தேடி அலைந்தனர். 

உடனே  இதைக்கண்ட சுர்ஜித் தாய் என் மகனை மீட்க பைதானே வேண்டும்... இதோ  நானே பை தைத்து தருகிறேன் நீங்கள் வேலையை கவனியுங்கள் எனக் கூறி. விட்டில் இருந்த தையல் மெஷினில் கண்ணீர்சிந்தியபடி தனது மகனுக்கு மடமடவென ஒரு துணிப்பையை தைத்து கொடுத்தார். அதைக்கொண்டு  மீட்பு படையினர்  ஆழ் துளையில் அசைவின்றி கிடக்கும் சுர்ஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆழ்துளையில் நினைவின்றி கிடக்கும் தன் மகனுக்காக அந்த பதற்றத்திலும்  சுமார்  20 நிமிடங்கள் நிதானமாக அமர்ந்து  பை தைத்த அந்த தாயின் நிலைமையைக் கண்டு அங்கிருந்தவர்கள் மனம் உறுகி கண்ணீர் வடித்தனர். 

click me!