மாண்டஸ் புயலால் சென்னையின் தற்போதைய நிலை என்ன? போக்குவரத்து காவல்துறை தகவல்..!

By vinoth kumar  |  First Published Dec 10, 2022, 9:44 AM IST

மாண்டஸ் புயல் சென்னையில் கோரத்தாண்டவம் ஆடி சென்றுள்ளது. இதனால், சென்னை பெருநகர போக்குவரத்தின் தற்போதைய நிலவரம் என்ன என்பது குறித்து போக்குவரத்து காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 


சென்னை பெருநகர காவல்துறை ஒருங்கிணைப்புடன் 72 மரங்கள் இதுவரை அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என சென்னை போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாண்டஸ் புயல் சென்னையில் கோரத்தாண்டவம் ஆடி சென்றுள்ளது. இதனால், சென்னை பெருநகர போக்குவரத்தின் தற்போதைய நிலவரம் என்ன என்பது குறித்து போக்குவரத்து காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

* மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள்:

 இல்லை

undefined

மழைநீர் தேங்கியுள்ளதால் கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து தடைபெற்றுள்ளது : 

மாண்டஸ் புயலைக் கருத்தில் கொண்டு, காந்தி சிலைக்கும் நேப்பியர் பாலத்துக்கும் இடையே உள்ள காமராஜர் சாலை வழியாக 09.12.2022 இரவு 11 மணி முதல் இந்த சாலையில் வசிப்பவர்கள் மற்றும் அவசர சேவை வாகனங்கள் தவிர இருவழிகளிலும் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. 10.12.2022 அன்று காலை 06 மணி முதல் போக்குவரத்து வழக்கம் போல் அனுமதிக்கப்படும்.

* மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடு: 

இல்லை

* சாலையில் பள்ளம் : 

இல்லை

* மாநகர பேருந்து போக்குவரத்து மாற்றம் :

 இல்லை

* மரங்கள் விழுந்து அகற்றும் பணி: 

சென்னையில் மாண்டஸ் புயல் மழையில் தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் 73 மரங்களும் . வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்தில் 24 மரங்களும் சாலைகளில் விழுந்துள்ளன. சென்னை பெருநகர காவல்துறை ஒருங்கிணைப்புடன் 72 மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. மீதமுள்ள மரங்கள் அப்புறப்படுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் மின்கம்பங்கள் 5 சாலைகளில் விழுந்துள்ளன. 3 மின்கம்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. 2 மின்கம்பங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சென்னை போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!