திருப்பதியில் தொடங்கியது தண்ணீர் பஞ்சம்…. பக்தர்கள் அவதி

By Asianet TamilFirst Published Jul 15, 2019, 12:55 PM IST
Highlights

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக தினமும் 70 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரம் பக்தர்கள் வரை திருமலைக்கு வருகின்றனர். திருமலையில் உள்ள தேவஸ்தான விடுதிகள், தனியார் மடங்கள் ஆகியவற்றில் 35 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் பக்தர்கள் வரை தங்குகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக தினமும் 70 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரம் பக்தர்கள் வரை திருமலைக்கு வருகின்றனர். திருமலையில் உள்ள தேவஸ்தான விடுதிகள், தனியார் மடங்கள் ஆகியவற்றில் 35 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் பக்தர்கள் வரை தங்குகின்றனர்.

திருப்பதியில் உள்ள விடுதிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும், கோயில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் திருமலையில் உள்ள 5 அணைகளில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. 

திருமலையில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக பாபவிநாசனம், குமாரதாரா, பசுபுதாரா, கோகர்ப்பம், ஆகாச கங்கை ஆகிய அணைகள் உள்ளன. பாபவிநாசனம் அணையில் 5 ஆயிரத்து 240 லட்சம் கியாலன் தண்ணீரை தேக்கி வைக்கலாம். ஆனால், அங்கு தற்போது தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது. 

குமாரதாரா அணையில் 4 ஆயிரத்து 858 லட்சம் கியாலன் தண்ணீரை தேக்கி வைக்கலாம். ஆனால், அதில் 1000 லட்சம் கியாலனுக்கும் குறைவாகவே தண்ணீர் இருப்பு உள்ளது. பசுபுதாரா அணையில் 1887 லட்சம் கியாலன் தண்ணீரை தேக்கி வைக்கலாம். தற்போது அங்கு குறைந்தளவே தண்ணீர் இருப்பு உள்ளது.

கோகர்ப்பம் அணையில் 2 ஆயிரத்து 833 லட்சம் கியாலன் தண்ணீரை தேக்கி வைக்கலாம். ஆனால், அதில் தண்ணீரே இல்லாமல் வறண்டு போய் விட்டது. ஆகாச கங்கை அணையில் 685 லட்சம் கியாலன் தண்ணீரை தேக்கி வைக்கலாம். ஆனால், அதிலும் தண்ணீர் இல்லாமல் வறண்டுபோய் விட்டது.

கோடையின் வெப்பத்தாலும், மழை பெய்யாததாலும் திருமலையில் கோகர்ப்பம், ஆகாச கங்கை அணைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் விட்டது. பசுபுதாரா அணையில் மட்டும் குறைந்தளவே தண்ணீர் உள்ளது. அதனை எந்த உபயோகத்துக்கும் பயன்படுத்த முடியாது.

கோகர்ப்பம் அணை கால்வாய்போல் காட்சி அளிக்கிறது. பாபவிநாசனம், குமாரதாரா அணைகளில் உள்ள தண்ணீர் திருமலையில் பக்தர்களின் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த தண்ணீரை ஒரு மாதத்துக்கு மட்டுமே இந்த தண்ணீரை பயன்படுத்த முடியும்.

தற்போது மழை பெய்தால் தண்ணீர் வரத்து இருக்கும். இல்லாவிட்டால், பக்தர்களின் பயன்பாட்டுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய முடியாமல் சிரமம் ஏற்படும் நிலை உருவாகும்.

தற்போது குறைந்த அளவே பக்தர்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 5 அணைகளில் மொத்தம் 14 லட்சத்து 303 லட்சம் கியாலன் தண்ணீர் இருப்பு இருக்கும்.

ஆனால், தற்போது மிகவும் குறைவான தண்ணீரே இருப்பு உள்ளது. இதனால், திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. பக்தர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருமலையில் உள்ள ஒட்டுமொத்த அணைகளிலும் தண்ணீர் வறண்டு விட்டால் திருப்பதி அருகே உள்ள கல்யாணி அணையில் இருந்து குழாய்கள் மூலம் திருமலைக்கு தண்ணீர் எடுத்து வந்து பக்தர்களின் பயன்பாட்டுக்கு வினியோகம் செய்வார்கள்.

ஆனால் அந்த கல்யாணி அணையிலும் தண்ணீர் குறைந்து வருகிறது.

கல்யாணி அணையிலும் தண்ணீர் குறைவாக உள்ளதால் திருப்பதி நகராட்சி பகுதி மக்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மக்களுக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

திருப்பதி நகரின் கிழக்கு தெற்கு பகுதிகளுக்கு விநியோகிக்கபட்டு வந்த தெலுங்கு கங்கா குடிதண்ணீரும் நகரின் மேற்கு பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் நகரின் மக்களுக்கு போதுமானதாக இல்லை.

இதனால் கண்டலேரு நீர்த் தேக்கத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.

நெல்லுர் மாவட்டம் கண்டலேரு அணையில் இருந்து கொண்டுவரப்படும் தண்ணீர் காளஹஸ்திக்கு அருகில் உள்ள கைலாசகிரி தண்ணீர் தொட்டியில் சேமிக்கப்பட்டு அங்கிருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்த தண்ணீர் கூடுருக்கும் கொண்டு செல்லபடுகிறது. இந்த தண்ணீரை கொண்டு வர 80 கி.மீட்டர் தூரத்திற்கு குழாய் அமைக்க வேண்டும்.

இதனால் செலவு மிக அதிகளவில் ஏற்படும் உடனடியாக தண்ணீர் தேவைப்படுவதால் அதனை இப்போது செயல்படுத்துவது சாத்தியமாகாது.

இதனால் திருப்பதிக்கு நிரந்தரமாக ஸ்ரீசைலம் தண்ணீரை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனை அரசு தீவிரப்படுத்தி செயல்படுத்தப்பட்டால் திருப்பதி, திருமலையில் தண்ணீர் பிரச்சனை மிகப்பெரிய அளவில் ஏற்படும். திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாவார்கள்.

இதனால் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

click me!