செடி புதருக்குள் இருந்து வரும் முனங்கல் சத்தம்... காதலர்களுக்கு படுக்கை அறையாக மாறிய வண்டலூர் பூங்கா..!

By vinoth kumar  |  First Published Dec 29, 2019, 3:58 PM IST

சென்னை வண்டலூரில் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா அமைந்துள்ளது. 602 ஹெக்டேர் (1490 ஏக்கர்) பரப்பளவில் பரந்து விரிந்துள்ள வண்டலூர் பூங்கா, தெற்கு ஆசியாவில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா என்ற சிறப்பை பெற்றுள்ளது. இந்த விலங்கியல் பூங்காவில் சுமார் 1,675 வகையான உயிரினங்கள் உள்ளன. அவற்றில் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, இருவாழ் உயிரிகள், மீன்கள் உள்ளிட்டவை அடங்கும். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பூங்காவிற்கு வந்து செல்வது வழக்கம்.

சென்னையை அடுத்த வண்டலூரில் உயிரியல் பூங்காவில் காதல்ஜோடிகள் மற்றும் கள்ளக்காதல் ஜோடிகள் பட்டப்பகலில் பொதுமக்கள் மத்தியில் அத்துமீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

சென்னை வண்டலூரில் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா அமைந்துள்ளது. 602 ஹெக்டேர் (1490 ஏக்கர்) பரப்பளவில் பரந்து விரிந்துள்ள வண்டலூர் பூங்கா, தெற்கு ஆசியாவில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா என்ற சிறப்பை பெற்றுள்ளது. இந்த விலங்கியல் பூங்காவில் சுமார் 1,675 வகையான உயிரினங்கள் உள்ளன. அவற்றில் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, இருவாழ் உயிரிகள், மீன்கள் உள்ளிட்டவை அடங்கும். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பூங்காவிற்கு வந்து செல்வது வழக்கம்.

Tap to resize

Latest Videos

காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை செயல்படும் இந்த பூங்கா செவ்வாய்க்கிழமையில் விடுமுறை அளிக்கப்படும். கோடை விடுமுறையை ஒட்டி அனைத்து நாட்களிலும் பூங்கா திறந்திருக்கும். இங்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து கண்டு களிப்பது வழக்கம். அதேபோல் ஏராளமான காதல் மற்றும் கள்ளக்காதல் ஜோடிகள் வந்து செல்கின்றனர்.

இதுபோல் வரும் காதல் ஜோடிகள் பூங்காவில் உள்ள மறைவான இடங்கள் மற்றும் செடி புதர்களில் உட்கார்ந்து அத்துமீறல் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதில் சிலர் பூங்காவின் வெளிப்படையான இடத்திலேயே சில்மிஷத்தில் ஈடுபடும் செயல், பூங்காவுக்கு வரும் குடும்பத்துடன் வருபவர்களை முகம் சுளிக்க வைக்கிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இதையும் படிங்க:- ஜீ.வி.பிரகாஷை ’பேச்சிலராக்கிய’இளம் நடிகை... திவ்யதரிசனம் காட்டி திக்குமுக்காட வைக்கும் கோவை அழகி..!

click me!