ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் .. உடனே விண்ணப்பிக்கவும்!!

Published : Sep 02, 2019, 04:08 PM ISTUpdated : Sep 02, 2019, 04:12 PM IST
ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்  .. உடனே விண்ணப்பிக்கவும்!!

சுருக்கம்

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கும் மருந்து விநியோகிப்பாளர் பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு நடத்தும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் மருந்தகங்களில் மருந்து விநியோகிப்பாளர் அல்லது மருந்து வழங்குபவர் என்ற பணிக்கு தற்காலிக ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: மருந்து விநியோகிப்பாளர் அல்லது மருந்து வழங்குபவர் 

மொத்த காலியிடங்கள் = 405 

வயது வரம்பு: 
குறைந்தபட்சமாக, 18 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சமாக 57 வயது வரை  (01.07.2019 அன்றுக்குள்)

கல்வித்தகுதி:
டிப்ளமா இன் பார்மஸி (சித்தா / யுனானி / ஆயுர்வேதா / ஹோமியோபதி) அல்லது தமிழக அரசால்நடத்தப்படும் டிப்ளமா இன் இண்டகிரேடட் பார்மஸி என்ற படிப்பை முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:
நாளொன்றுக்கு ரூ.750 (வாரத்தில் 6 நாட்கள்)
வழங்கப்படும். தினமும் 6 மணி நேரம் பணியாற்ற வேண்டும்.

முக்கிய தேதிகள்: 
அறிவிப்பாணை வெளியான தேதி: 31.08.2019 
விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 31.8.2019 
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.09.2019, மாலை 5.00 மணி வரை

விண்ணப்பிக்கும் முறை:

தமிழக சுகாதாரத்துறையின் http://www.tnhealth.org/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செப்டம்பர் 20 ம் தேதி மாலை 5 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

முகவரி:
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநர்,
அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துமனை வளாகம்,
அரும்பாக்கம்,
சென்னை - 600 016.

மேலும் விபரங்களுக்கு http://www.tnhealth.org என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!