ஆதவ் அர்ஜூனா பேச்சுக்கு ஈபிஎஸ்ஸிடம் வருத்தம் தெரிவித்தாரா விஜய்? நடந்தது என்ன?

Published : Jun 02, 2025, 08:01 AM IST
Vijay  and Edappadi Palaniswami

சுருக்கம்

ஆதவ் அர்ஜூனா எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசிய நிலையில், இதற்காக ஈபிஸ்ஸிடம் விஜய் வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

TVK Vijay Spoke to EPS Regarding Aadhav Arjuna's speech: நடிகர் விஜய்யின் தவெக கட்சி தேர்தல் பரப்புரை மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாருமான எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசியது சர்ச்சையானது. அதாவது தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்துடன் உரையாடிய ஆதவ் அர்ஜுனா,

''பாஜகவே அதிமுக கூட்டணியில் இருந்து விலகி விடும். எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணி வர தயாராக இல்லை. அண்ணாமலை கூட 10 பேரை கூட வைத்துக்கொண்டு தேர்தலில் நின்று 18% ஓட்டு வாங்கினார். ஆனால் எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு வர மாதிரி தெரியவில்லை'' என்று தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசிய ஆதவ் அர்ஜூனா

இந்த உரையாடலின்போது ஆதவ் அர்ஜூனா ஈபிஎஸ்ஸை ஒருமையில் பேசியது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் பேச்சுக்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தனது பேச்சுக்கு ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்கள். ஆதவ் அர்ஜூனாவின் பேச்சை தவெகவினரே ரசிக்கவில்லை என்பதால் கடைசியில் அவர் வருத்தம் தெரிவித்தார்.

வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ''எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன் பயணிப்பவர்களுக்கு அது நன்கு தெரியும்.

தனிமனித விமர்சனங்கள் அழகல்ல

என்னுடைய அரசியல் பயணத்தில் எத்தனையோ விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் என் மீது முன்வைக்கப்படும் பொழுது, எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது. உண்மையும், நேர்மையும் கொண்ட ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன். தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாகக் கொண்டுள்ளேன்.

ஜனநாயகத்தை மதிப்பதே எனது இலக்கு

அப்படியிருக்கையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். அந்தவகையில், கொள்கைக்கான அரசியலையும், வெளிப்படைத்தன்மையான ஜனநாயகத்தையும் என்றும் மதித்து பயணிப்பதே எனது இலக்கு'' என்று கூறியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமியிடம் பேசிய விஜய்

இந்நிலையில், ஆதவ் அர்ஜூனா பேச்சுக்கு தவெக தலைவர் விஜய் எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆதவ் அர்ஜூனா பேச்சல் அதிமுகவினர் அப்செட் ஆக இருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட விஜய், ஆதவ் அர்ஜூனா பேசியது சரியானது அல்ல என்றும் அவரிடம் இப்படி பேசக்கூடாது என சொல்லி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆதவ் ஆர்ஜூனாவுக்கு விஜய் அட்வைஸ்

இதனைத் தொடர்ந்து 'ஈபிஎஸ் தொடர்பான பேச்சுக்கு நீங்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும்' என ஆதவ் ஆர்ஜூனாவுக்கு விஜய் உத்தரவிட்டதாகவும், அதன்பிறகே ஆதவ் அர்ஜூனா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் திமுக உள்ளிட்ட கட்சிகள் மீது விமர்சனம் வைக்கலாம்; ஆனால் அது நாகரீகமான முறையில் இருக்க வேண்டும் என விஜய் அவரிடம் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!