சிக்கிய லேப்டாப், பென்டிரைவ்.. ஆபாச சாட்.. வீடியோ கால்.. கையும் களவுமாக சிக்கிய சிவசங்கர் பாபா..!

By vinoth kumarFirst Published Jun 30, 2021, 6:55 PM IST
Highlights

விசாரணையின் போது சுஷில்ஹரி பள்ளியில் இருந்த லேப்டாப், பென்டிரைவ்  உள்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிவசங்கர் பாபா பல ஆண்டுகளாக ஆபாச சாட் செய்ய இ-மெயிலை பயன்படுத்தி வந்துள்ளார்.

சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தார்கள். இதுதொடர்பான வழக்கில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவை விசாரித்து வந்தனர்.

இதற்கிடையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து கடந்த ஒரு வாரமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட அவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 3 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். இதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

விசாரணையின் போது சிவசங்கர் பாபாவை நேற்று சுஷில்ஹரி சர்வதே பள்ளிக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் அங்கு அவரிடம் விசாரணை செய்தனர். விசாரணையின் போது சுஷில்ஹரி பள்ளியில் இருந்த லேப்டாப், பென்டிரைவ்  உள்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிவசங்கர் பாபா பல ஆண்டுகளாக ஆபாச சாட் செய்ய இ-மெயிலை பயன்படுத்தி வந்துள்ளார். இந்த இ-மெயில் முகவரி மூலம் சிவசங்கர்  பாபா மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசி வந்ததாக கூறப்படுகிறது. 

தற்போது இ-மெயில் முடக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட இ-மெயிலை  சைபர் ஆய்வகம் மூலம் ஆய்வு செய்தபோது ஆபாச சாட் மற்றும் வீடியோ கால் பேசியதற்கான ஆதாரம் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், 3 நாள் கஸ்டடியில் எடுத்த போலீசார், ஒரு நாளைக்கு முன்பே விசாரணையை முடித்துவிட்டு மீண்டும் சிறையில் அடைத்தனர்.

click me!