முதல்வரின் தனிப்பிரிவு புகார்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு.. புதிய டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி..!

By vinoth kumarFirst Published Jun 30, 2021, 12:27 PM IST
Highlights

மிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு காவல்துறை தலைமை பொறுப்பில் பணியாற்றுவது அரிய சந்தர்ப்பம். இந்த அரிய வாய்ப்பை தந்த முதல்வருக்கு நன்றி. சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் தரப்படும். முதல்வர் தனிப்பிரிவில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் டிஜிபி சைலேந்திரபாபு உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தின் 30வது சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக பதவியேற்றுக்கொண்ட சைலேந்திரபாபு குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி திரிபாதி நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில், புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபி யார் என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்தப் பதவியைத் தமிழக அரசே நேரடியாகத் தேர்வு செய்தாலும் அதற்கான பட்டியலை மத்திய அரசு தேர்வாணையத்துக்கு சமர்ப்பித்து, அந்த அமைப்பு அளிக்கும் பட்டியலிலிருந்தே ஒருவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இப்பதவியைப் பிடிக்கும் போட்டியில் சைலேந்திர பாபு, சஞ்சய் அரோரா, கரன் சின்ஹா, சுனில் குமார் சிங், கந்தசாமி, ஷகில் அக்தர், பிரஜ் கிஷோர் ரவி ஆகிய 7 பேர் இருந்தனர். .இறுதிப் பட்டியலில் சைலேந்திர பாபு, கரன் சின்ஹா ஆகிய இருவர் மட்டும் இருந்ததாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில், சைலேந்திர பாபுவை புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக நியமித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இதனையடுத்து, புதிய டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு காவல்துறை சார்பில் வரவேற்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், தமிழக காவல்துறையின் 30வது சட்டம்- ஒழுங்கு புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு பதவியேற்றுக்கொண்டார். 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்; தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு காவல்துறை தலைமை பொறுப்பில் பணியாற்றுவது அரிய சந்தர்ப்பம். இந்த அரிய வாய்ப்பை தந்த முதல்வருக்கு நன்றி. சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் தரப்படும். முதல்வர் தனிப்பிரிவில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் டிஜிபி சைலேந்திரபாபு உறுதியளித்துள்ளார். மக்களிடம் போலீசார் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு 2022ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!