போக்குவரத்து போலீசாருக்கு திடீர் நெஞ்சுவலி... வீட்டில் சுருண்டு விழுந்து உயிரிழந்த பரிதாபம்..!

By vinoth kumarFirst Published Mar 30, 2020, 7:00 PM IST
Highlights

அம்பத்தூர் அடுத்த பாடி தேவர் நகர் டிவிஎஸ் நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பழனி(57). இவர் அமைந்தகரை போக்குவரத்து காவல்துறை தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டு மதியம் 3 மணியளவில் வீடு திரும்பினார். இரவு 7 மணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அமைந்தகரையில் பணி முடிந்து வீட்டுக்கு சென்ற போக்குவரத்து போலீசார் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் அடுத்த பாடி தேவர் நகர் டிவிஎஸ் நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பழனி(57). இவர் அமைந்தகரை போக்குவரத்து காவல்துறை தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டு மதியம் 3 மணியளவில் வீடு திரும்பினார். இரவு 7 மணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர்  ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  தற்போது ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு போலீசாருக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. பழனியும் தொடர்ந்து பணிக்கு சென்று வந்துள்ளார். இதனால் அவர் பணிச்சுமை காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என போலீசார் குமுறலுடன் தெரிவித்தனர்.

click me!