மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து போறீங்களா..? அதிர்ச்சியாகாதீங்க, உறுதியா செம கவனிப்பு இருக்கு பாஸ்..!

Published : Jun 14, 2019, 03:27 PM IST
மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து போறீங்களா..?  அதிர்ச்சியாகாதீங்க, உறுதியா செம கவனிப்பு இருக்கு பாஸ்..!

சுருக்கம்

இப்போது போலீசார் பாரபட்சமின்றி பெண்களிடமும் அபராதம் வசூலிக்கிறார்கள். குடும்பத்தோடு செல்பவர்களை வழி மறித்தும் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்களின் லைசென்சை பறிமுதல் செய்தால் என்ன? என்று போக்குவரத்து காவலர்களுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதைத் தொடர்ந்து சென்னையில் போக்குவரத்து காவலர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடிக்க அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த ஹெல்மெட் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஹெல்மெட் சட்டம் நடைமுறைப்படுத்தபட்டபோது மோட்டார் சைக்கிளில் செல்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இப்போதும் போலீசார் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களிடமும் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கைகள் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்லும் பெண்களிடம் போலீசார் அபராதம் வசூலிக்க தயக்கம் காட்டுவதுண்டு. ஆனால், இப்போது போலீசார் பாரபட்சமின்றி பெண்களிடமும் அபராதம் வசூலிக்கிறார்கள். குடும்பத்தோடு செல்பவர்களை வழி மறித்தும் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

இதற்காக கடந்த வாரம் போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலிப்பதற்காக 352 அதிநவீன எந்திரங்களை வழங்கப்பட்டது. இதனை வைத்து தனித்தனி இடங்களில் அபராதம் வசூலிக்கும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி அபராத வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் தினமும் 3500 பேரில் இருந்து 4 ஆயிரம் பேர் வரை போலீஸ் பிடியில் சிக்குவதாக போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை
குட்நியூஸ்.. சென்னை மாநகரப் பேருந்து பாஸ் கட்டணம் அதிரடி குறைப்பு.. எப்படி பெறுவது?